பீகாரின் ஹாஜிபூர் நகரில் வைத்து மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை, முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் சகோதரரும், ஜன்சக்தி கட்சி தலைவருமாகிய பசுபதி குமார் பராஸ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பீகாரில் உள்ள ஹாஜிப்பூருக்கு பசுபதி குமார் அவர்கள் நேற்று முன்தினம் காரில் வந்த பொழுது, பசுபதி குமார் மீது ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் ஆதரவாளரான பெண் ஒருவர் கருப்பு மையை தெளித்துள்ளார்.
இந்நிலையில், அவரது சட்டையில் மை கறை படிந்தததால், அவர் தனது சட்டையை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியது தொடர்பாக 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்பொழுது 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன்குமார், அணில் பஸ்வான் மற்றும் திரிபுவன் பஸ்வான் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு குற்றவாளி ஆகிய லட்சுமி தேவி எனும் பெண்மணி தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…