4 கோடி பணம் கையாடல் : எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்- எல்.முருகன்!

தேர்தல் செலவின பணம் பதுக்கியதாக எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக நிர்வாகிகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜ குற்றம் சாட்டிஇருந்தார். இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவின் குற்றசாட்டை நிராகரித்ததுடன் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் 4 கோடிபணத்தை பதுக்கி கொண்டார் எனவும், அதில் தற்பொழுது வீடு கட்டி வருகிறார் எனவும் ராஜினாமா செய்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் காரைக்குடியில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த விசாரணையின் பொழுது எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகார் டெல்லியில் உள்ள பாஜக மேலிடம் வரை சென்றுள்ளது. எனவே தற்போது இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தேர்தல் சமயத்தின் பொழுது பணம் கையாடல் தொடர்பாக எச்.ராஜா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025