ஜார்கண்டில் காப்பக சிறுமிகள் அளித்த பாலியல் புகாரில் வார்டன் உட்பட 4 பேர் கைது..!

ஜார்கண்டில் உள்ள காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வார்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாம்செட்பூர் நகரில் இருக்கும் டெல்கோ நகரில் அன்னை தெரசா நல அறக்கட்டளை என்ற காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் மேலாளராக ஹர்பல் சிங் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் வசித்து வரும் சிறுமிகள் பாலியல் தொல்லை காரணமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஜாம்செட்பூர் நகர எஸ்பி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையில், சிறுமிகளை பாலியல் தொல்லை செய்தது மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது போன்ற பல தீங்கான செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காப்பகத்தின் மேலாளர் ஹர்பல் சிங், அவரது மனைவி புஷ்பா திர்கி, வார்டன் கீதா தேவி உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பிரச்சனையால் இங்கு வசித்த சிறுமிகளை வேறு காப்பகத்திற்கு மாற்றியுள்ளனர். அந்நேரத்தில் இந்த காப்பகத்தில் இருந்த 2 சிறுமிகள் காணாமல் போய்விட்டனர். அதனால் தற்போது அந்த சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025