ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த 4 பேரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாகவும், ஆளில்லா விமானம் மூலம் அமிர்தசரஸ் நகரம் ஆகிய ஆயுதங்கள் போடப்படும் என்றும் பானிப்பட் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக கைதானவர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இன்று ஜம்மு நகரில் இருந்து நான்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை கைது செய்ததால் நாளை 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும், பயங்கரவாத தாக்குதல்களை தடுத்ததாகவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025