காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 5பயங்கரவாதிகள் கொலை!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதலின்போது முதலில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஹிண்டுவால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் அவர்கள், கடந்த புதன்கிழமை மட்டும் காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவர்களில் லக்ஷர் இ தொய்பா மற்றுமொருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பிற இடங்களில் தொடர்ந்து பயங்கரவாதிகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025