நேற்று முன்தினம் புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கியது.
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.
10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே உள்ளது. மீதமுள்ள 5 விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் தனது பயணத்தை தொடங்கியது.
இந்தியா-பிரான்ஸ் இடையே 7 ஆயிரம் கி.மீ. தூரம பயணம் செய்து, இந்த 5 ரபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கியது. இந்த விமானங்கள் லடாக் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பணியில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் திறன்களை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…