இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி சமீப நாட்களாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மணாலி, சிம்லா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்குவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் இந்த அஜாக்கிரதையால் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து விதிமுறைகள் மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆயிரம் அபராதம் அல்லது எட்டு நாட்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…