ஒடிசா விபத்தினால் 58 ரயில்கள் ரத்து…! ரயில்வே நிர்வாகம் தகவல்..!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஒடிசா செல்லும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறுகையில், பாலசோர் ரயில் விபத்தினால் இதுவரை மொத்தம் 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 81 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, 10 ரயில்கள் குறுகிய கால நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
#WATCH | So far, a total of 58 trains stand cancelled, 81 were diverted & 10 were terminated. Work is underway in full swing, & restoration will be done soon; first, we will complete the restoration of the downline: Amitabh Sharma, Spokesperson, Ministry of Railways on Balasore… pic.twitter.com/BOUXkSAhw2
— ANI (@ANI) June 3, 2023