ஒடிசா ரயில் விபத்து..! ரத்து செய்யப்பட்ட மற்றும் பாதை மாற்றப்பட்ட ரயில்களின் விவரம் இங்கே..!

ஒடிசா ரயில் விபத்தினால் ரத்து செய்யப்பட்ட மற்றும் பாதை மாற்றப்பட்ட ரயில்களின் விவரங்களை இங்கே காணலாம்.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஒடிசா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. அவற்றில் ரத்து செய்யப்பட்ட மற்றும் பாதை மாற்றப்பட்ட ரயில்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து :
- இன்று (ஜூன் 3) மங்களூரில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் சந்த்ராகாச்சி விவேக் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ரங்கபாரா வடக்கிலிருந்து புறப்படும் ஈரோடு அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.
- நாளை சென்னையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் ஷாலிமார் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் காலை 8.10 மணிக்கு புறப்படும் சந்த்ராகாச்சி ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
- ஜூன் 6ம் தேதி கவுகாத்தியில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரயா பெங்களூரு ட்ரை வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
- ஜூன் 7ம் தேதி காமாக்யாவிலிருந்து 2.00 மணிக்கு புறப்படும் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா பெங்களூரு ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
ரயில்களின் மாற்றுப்பாதை :
- ஜூன் 2 அன்று சென்னையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் சம்பல்பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, டாடாநகர் மற்றும் காரக்பூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
- ஜூன் 1 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து 4.55 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் பை வாராந்திர எக்ஸ்பிரஸ் சம்பல்பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, டாடாநகர் மற்றும் காரக்பூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
- ஜூன் 2 அன்று பெங்களூரில் இருந்து 11.20 மணிக்கு புறப்பட்ட ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் சம்பல்பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, டாடாநகர் மற்றும் காரக்பூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
- ஜூன் 2 அன்று பெங்களூருவில் இருந்து 10.15 மணிக்கு புறப்பட்ட அகர்தலா எக்ஸ்பிரஸ் ஜரோலி, டங்காபோசி, டாடாநகர், காரக்பூர் மற்றும் ஹவுரா வழியாக இயக்கப்பட்டது.
- ஜூன் 2 அன்று சென்னையில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்ட ஹவுரா மெயில் ஜரோலி, டங்காபோசி, டாடாநகர் மற்றும் காரக்பூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.
- ஜூன் 1 அன்று பெங்களூரில் இருந்து 11.40 மணிக்கு புறப்பட்ட கவுகாத்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜார்சுகுடா, டாடாநகர், காரக்பூர் வழியாக இயக்கப்படும்.
- ஜூன் 1 அன்று தாம்பரத்தில் இருந்து 6.35 மணிக்குப் புறப்பட்ட நியூ டின்சுகியா, ஜரோலி, டங்காபோசி, ராஜ்கர்சவான், டாடாநாகர் மற்றும் சாண்டில் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.
- ஜூன் 2 அன்று சாந்த்ராகாச்சியில் இருந்து 6.00 மணிக்கு புறப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜார்சுகுடா, சம்பல்பூர் சிட்டி, அங்கூல் மற்றும் கட்டாக் வழியாக இயக்கப்படும்.
Changes in the pattern of train services – Passengers to please take note#TrainAccident pic.twitter.com/NCAnU0QPYM
— Southern Railway (@GMSRailway) June 3, 2023