ஒடிசா ரயில் விபத்து...மருத்துவ உதவிகளை பார்வையிட நாளை ஒடிசா செல்கிறார் மன்சுக் மாண்டவியா..!

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும்

Mansukh Mandaviya

மருத்துவ உதவிகளை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை எய்ம்ஸ் மற்றும் கட்டாக் செல்கிறார்.

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 288 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மீட்புப்பணிகள் குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு கட்டாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை புவனேஸ்வர் எய்ம்ஸ் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு வருகை தருகிறார்.