7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : பெருவாரியான வெற்றியை பெற்ற I.N.D.I.A கூட்டணி ..!

I.N.D.I.A Aliance Victory

இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13  சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக சென்றது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களில் நின்று போட்டியிட காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இமாசலப் பிரதேஷத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள் நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் தெக்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட கமலேஷ் தாக்கூர் 32,737 வாக்குகள் பெற்று 9399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஹோஷியர் சிங் 23,338 வாக்குகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மற்றொரு தொகுதியான நலகரில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஹர்தீப் சிங் பாவா 34,608 வாக்குகள் பெற்று 8990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட கே.எல். தாக்கூர் 25,618 வாக்குகள் பெற்று 2-ஆம் பிடித்து தோல்வியடைந்தார்.

மேலும், மற்றும் ஒரு தொகுதியான ஹமிர்பூரில்  பாஜக சார்பாக போட்டியிட்ட ஆஷிஷ் ஷர்மா 27,041 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான புஷ்பிந்தர் வர்மாவை விட 1571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பாக நின்ற புஷ்பிந்தர் வர்மா 25,470  வாக்குகள் பெற்றுருந்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வார தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கமலேஷ் பிரதாப் ஷா 83,105 வாக்குகள் பெற்று  3027 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளரான திரன் ஷா சுக்ராம் தாஸ் இன்வதி 80,078 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். மேலும், பஞ்சாபில் உள்ள மேற்கு ஜலந்தர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மீ சார்பாக போட்டியிட்ட மொஹிந்தர் பகத் 55,246 வாக்குகளை பெற்று 37,325 வாக்குகள் விடியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை தொடர்ந்து 2-ஆம் இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஷீடல் அங்கூரல் 17,921 வாக்குகளும், 3-வது இடத்தில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சுரிந்தர் கவுர் 16,757 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அதில், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட லகாபத் சிங் புடோலா  28,161  வாக்குகள் பெற்று 5224 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2-வது இடத்தில் பாஜக சார்பாக போட்டியிட்ட ராஜேந்திர சிங் பண்டாரி 22,937 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மேலும், மற்றொரு தொகுதியான மங்களூரில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட காசி முகமது நிஜாமுதீன் 31,727 வாக்குகள் பெற்று  422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட கர்தார் சிங் பதானா 31,305 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போட்டியாளரான மனாஸ் குமார் கோஷை வெற்றி பெற்றார். கல்யாணி 86,479 வாக்குகளும், கோஷ் 36,402 வாக்குகளும் பெற்றனர்.

அதே மாநிலத்தில் உள்ள பாக்தா சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பளரான மதுபர்ணா தாக்கூர், தனது போட்டியாளரான பாஜகவின் பினய் குமார் பிஸ்வாஸை விட 33, 455வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுபர்ணா தாக்கூர் 1,07,706, பிஸ்வாஸ் 74,251 பெற்றுருந்தனர். மற்றொரு தொகுதியான ரணகாட் தக்ஷினில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட  டிஎம்சியின் முகுத் மணி அதிகாரி 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முகுத் மணி 1,13,533 வாக்குகள் பெற்றிருந்தார், அதே நேரம் மனோஜ் குமார் பிஸ்வாஸ் 74,485 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மேலும், மணிக்தலா சட்டமன்ற தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே, பாஜகவின் கல்யாண் சௌபேயை விட 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுப்தி பாண்டே 83,110 வாக்குகள் பெற்றிருந்தார், பாஜகவின் கல்யாண் சௌபே 20,798 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பாமக வேட்பாளரான சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்