கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் சுவர்களில் ஏறும் போது கீழே விழுந்தேன். ஆனால் அதனை தொடர்ந்து நான் இந்த முயற்சியில் வெற்றியை பெற்றேன் என்று தெரிவித்தார்.
மேலும் சிறுவனின் வீட்டிலுள்ள பெற்றோர்கள் ஆரம்பத்தில் அவன் கீழே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் சுவர்களில் ஏறுவதை ஊக்கப்படுத்தவில்லையாம். அதனையடுத்து சிறுவன் தினமும் முயற்சியை கைவிடாமல் செய்வதை கண்டு அவனை ஊக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஏறும் போது நழுவினால் குதித்து விட்டு மீண்டும் முயற்சிப்பேன் என்று சிறுவன் கூறியுள்ளார். இந்த ஏழு வயது சிறுவனின் ஸ்பைடர்மேன் ஆகும் முயற்சிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…