விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்ற 72 வயது நபர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய 72 வயது நபர், கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பித்து, நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துக் கொண்டார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கட்டாயத் பரிசோதனைக்கு அவரது பெயர் அழைக்கப்பட்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்றும், நிறுவன தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்த நபர் வேண்டுமென்றே கொரோனா சோதனையை தவிர்த்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி,…