சிறையில் 85 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி..!

Published by
murugan

அசாமின் நாகான் மாவட்ட சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 85 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பரில் அசாமின் நாகான் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறையில் மொத்தம் 85 கைதிகள் எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாகான் பிபி சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எல் சி நாத் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம்  கூறியதாவது, எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் போதை பழக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் நாத் கூறினார்.

எச்.ஐ.வி தொற்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்கள். தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுக்க அவர்கள் ஒரே  ஊசியைப் பயன்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அசாம் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (ASACS) 2002 முதல் ஜூன் 2021 வரை அசாமில் மொத்தம் 20085 HIV பாசிட்டிவ் கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் அனுராக் கோயல் கூறியிருந்தார்.

அதில், கம்ரூப் மாவட்டத்தில் 6,888 பேருக்கும், கச்சார் மாவட்டத்தில் 4609 பேருக்கும் மற்றும் திப்ருகர் மாவட்டத்தில் 1245 பேருக்கும் HIV இருந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

30 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

34 minutes ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

1 hour ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago