#BREAKING: கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு ?

கொரானாவுக்கு கர்நாடகத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு காய்ச்சல் ,சளி போன்றவை இருந்ததால் கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் தொடர் கண்காணிப்பிலும் இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் கர்நாடக மாநில சார்பில் சளி , காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழந்தார் கூறப்படுகிறது. மேலும் இவரின் மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025