ஐயோ..வெயிலில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்த 9 மாத கர்ப்பிணி பெண்…உயிரிழந்த பெரும் சோகம்.!!

Heat Stroke Death

மகாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு தாலுகாவில் உள்ள ஒசர் வீரா கிராமத்தைச் சேர்ந்தவர சோனாலி வாகாட். இவர் கர்ப்பமாகி 9 மாதத்தில் ஆன நிலையில், ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வருகின்ற 27-ஆம் தேதி குழந்தை பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து, இன்று சோனாலி வாகாட்க்கு திடீரென பிரசவ வலி அதிகமான காரணத்தால் 3.5 கிமீ தூரம் கோடை வெயிலின் நடுவே நெடுஞ்சாலையில் நடந்தே ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் இது சாதாரண வலி என்று கூறி மருத்துங்களையும் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து,மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக போக்குவரத்து வசதி இல்லாததால் 3.5 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வெயிலில் நடந்து சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்தே வந்துள்ளார்.  மொத்தமாக 7 கிமீ அவர் நடந்தே வெயிலில் சென்ற காரணத்தால் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

சிறிது நேரத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார். மேலும், 7 கி.மீ வரை வெயிலில் நடந்ததால் உடல்நலம் மோசமாகி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்