மத்திய அமைச்சரவையில் மாற்றமா? பிரதமர் மோடி இன்று ஆலோசனை.!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் ஆளும் பாஜக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய அமைச்சரவையில் பாஜக கூட்டணி கட்சியினரும் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகிறது. இன்னும் சில மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சிந்தித்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது