கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும்.! இபிஎஸ் வேண்டுகோள்.! 

ADMK Chief Secretary Edapadi Palanisamy

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேற்று சேலத்தில் அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர், விரைவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் அதிமுகவில் இணைவார்கள். அப்படி இணையும் போது அதிமுக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார் என்று குறிப்பிட்டார்.

அடுத்து மேகதாது விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , மேகதாது விவகாரத்தில் திமுக மௌனம் சாதித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே.சிவக்குமார் கூறும் கருத்துக்கள் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்றம் கூறியதன் படி காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை ஏற்க வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகாவில் நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத ஒன்று என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடுத்ததாக முதல்வர் பற்றி கூறுகையில், முதல்வரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தபோது தவறுகளை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயம் என கேள்வி எழுப்பினார். அடுத்து , எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு ஏதும் தேவையோ, எது நல்லதோ அதனை செய்ய வேண்டும். அதனைத் தான் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கெட்ட நோக்கத்துடன் தமிழக முதல்வர் செயல் பட்டு உள்ளார் என்பது அவரது பேச்சின் மூலம் தெளிவாகிறது என்று முதல்வரின் பேச்சை பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்