இன்று கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேபுபராகடற்கரை அருகே, இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.3 மணியளவில், கெபுபராவில் வங்காளதேசத்தின் தென்கிழக்கே 200 கிமீ தொலைவிலும், திகாவிற்கு (மேற்கு வங்கம்) கிழக்கு-தென்கிழக்கே 430 கிமீ தொலைவிலும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருக்கிறது.
அதன்பிறகு, இது அடுத்த 24 மணி நேரத்தில் கங்கை நதி மேற்கு வங்கத்தின் குறுக்கே மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.