10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி வீட்டை பரிசாக அளித்த இந்தூர் அரசாங்கம்.
பாரதி கண்டேகர் என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அவரது குடும்பத்தினருடன் நடை பாதையில் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது கடின முயற்சியையும், வெற்றியையும் பாராட்டி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் இவருக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவி பாரதி கூறுகையில், ‘வீட்டிற்கான நிர்வாகத்திற்கும், தனது எதிர்கால கல்வியை இலவசமாக்கியமைக்கும் நன்றி. என்னை ஊக்குவித்த என் பெற்றோருக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களிடம் வசிக்க ஒரு வீடு இல்லை, நாங்கள் நடைபாதையில் தங்கியிருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது எதிர்கால கனவு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது என்றும், அவர் பெற்ற வெற்றியின் பெருமையை தனது பெற்றோருக்கு வழங்குவதாகவும், மேலும் தனது ஆசிரியர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…