உத்தர பிரதேச அகில பாரதியா அகார பரிஷத் மடாதிபதி நரேந்திர கிரி தற்கொலை தொடர்பாக அவரது சீடர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது வீட்டில் இருந்த கடிதத்தின் அடிப்படையில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த தற்கொலைக் குறிப்பில் அவரது தற்கொலைக்கான காரணம் அவருடைய சீடரான ஆனந்த் கிரி மற்றும் இரண்டு பேர் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரது சீடரான ஆனந்த் கிரி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது பிரயாக்ராஜ் ஜார்ஜ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ள குருஜியின் சீடர் ஆனந்த் கிரி, தனது வாழ்க்கையில் ஒருமுறை கூட குருஜி எழுதியது இல்லை எனவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், அவரது கையெழுத்து குறித்து அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…