நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,483 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,636 ஆக அதிகரித்துள்ளன.
இதனிடையே,தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாறாக,விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதைப்போல பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 27 ஆம் தேதி) அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை உள்ளார்.காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக,நாட்டில் மீண்டும் நிலவும் கொரோனா பரவல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விளக்கம் அளிக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…