முக்கியச் செய்திகள்

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஏஜென்டுகள்.! ரிசர்வ் வங்கி கவுண்டரில் நின்றவர்களை விசாரணை செய்த குற்றப்பிரிவு காவல்துறை.!

Published by
செந்தில்குமார்

கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளுமாறு தெரிவித்தது.

இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் அருகில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதேபோல, ஒடிசாவில் உள்ள ரிசர்வ் வங்கியில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கவுன்டரில் பலர் வரிசையில் நின்றுள்ளனர். அவர்களிடம் ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் (EOW) விசாரணை நடத்தியுள்ளனர்.

ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.! ரிசர்வ் வங்கி

இந்த விசாரணை குறித்து கூறிய போலீசார், “சிலர் மற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாக தகவல்கள் வெளியானது. இதனால் நாங்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்து, பணம் மாற்ற கவுன்டரில் வரிசையில் நிற்கும் நபர்களின் ஆதார் அட்டையை சரிபார்த்தோம். மேலும் அவர்களின் தொழில் குறித்தும் அவர்களிடம் கேட்டோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

போலீசார் வரிசையில் நிற்பவர்களிடம் விசாரணை நடத்தியது மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்தனர். இதற்கிடையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை 97% க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

25 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago