டெல்லியில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்த்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டு இருந்தாக கூறப்பட்டது.
இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025