தொடரும் அமளி..! மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு ..!

கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 9 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது.
இதனைதொடர்ந்து, பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் வழக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, 10 வது நாளான இன்றும் மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025