ஹரியானா வன்முறை சம்பவம்.! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

இந்நிலையில், ஹரியானா, டெல்லி சமபவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் , பதற்றம் நிறைந்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள்

Supreme court

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. இதில் இதுவரை 2 ஊர்காவலப்படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஹரியானா மட்டுமின்றி டெல்லியிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் பஜிரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் டெல்லியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரியானா, டெல்லி சமபவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் , பதற்றம் நிறைந்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.