அவசர ஊர்தி வசதி இல்லாததால், உடல் நலமின்றி அவதிப்பட்டு வரும் தனது தந்தையை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளு வண்டியில் இழுத்தே சென்ற மகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகா, கே. பாதூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). இவர், காய்கறி, பழங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணப்பாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்கனவே தொடர்ந்து பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரத்திற்கு சென்றார். இதனால், காயம் புரையோடிப் போய் காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே நடக்க முடியாமல் கிருஷ்ணப்பா கடும் அவதிப்பட்டு வந்தார். இவரது மகன் மது (14) தந்தை படும் அவதியை பார்த்து வேதனை அடைந்து, தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை. இந்நிலையில், நேற்று தந்தை கிருஷ்ணப்பா வலியால் துடித்துள்ளார். மது, தந்தையை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான். இதற்காக ஒரு தள்ளு வண்டியை ஏற்பாடு செய்து அதில் தனது தந்தையை உட்காரவைத்து இழுத்துக்கொண்டே 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனையை நோக்கி சென்றான்.இதை பார்த்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வளர்ந்த நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் நிலையிலும் இத்தகைய அவல நிலையும் நிகழ்ந்தவண்ணமே உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…