பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.
இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தல் சந்தித்ததால்களை சந்தித்து இந்தியாவிற்கு வந்தனர்.இதுபோன்று 11 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தால் முன்பு குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதப்படமாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.இவர்களில் யாராவது சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் வழக்கை சந்தித்து இருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பளிக்கும்.
இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட மதத்தை புறக்கணிப்பதாக உள்ளதாகவும், மத ரீதியிலான நாட்டை உருவாக்க பாஜக முயற்சிப்பதாகவும் அதனால் பல்வேறு மாநில அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த மசோதா கடந்த 1985-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அசாம் ஒப்பந்தத்திற்கு எதிரானது.அந்த ஒப்பந்தத்தில் 1971-ம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மத பாகுபாடின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…