Amit Shah survived the helicopter crash [file image]
Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார்.
அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். பின்னர் பெகுசராய் பகுதியில் இருந்து அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது தூரம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து லேசாக நிலை தடுமாறியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் சீராக பறந்து சென்றது.
பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த ஹெலிகாப்டரை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக மத்திய உள் அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பினார்.
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…