சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு.
மத்திய பிரதேச மாநிலத்தில் மனோஜ் யாதவ் என்பவர், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் படங்களை ரசித்து பார்ப்பதுண்டு. இவரது படங்களை தொடர்ந்து பார்த்து வந்த இவர், அவர் செய்வது போன்று செய்ய முயற்சி செய்துள்ளார்.
இவர் இரண்டு ஹோண்டா கார்களை ஓடவிட்டு, போலீஸ் உடையணிந்து காரில் ஏறி கொண்டு, காரின் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு, மற்றோரு காலை மற்றோரு காரின் மீது வைத்துக் கொண்டு, இதன் பின்னணியில் சிங்கம் பாடலை ஓட விட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், இவர் வெளியிட்டுள்ள வீடியோ, சாகர் காவல் ஆய்வாளர் அனில் ஷர்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மனோஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவரது உத்தரவின் பேரில், மனோஜின் தலைமை பொறுப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இவர் சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…