ஆந்திராவில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

ஆந்திராவில் மேலும் 6,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது.
இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,00,235 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,869 ஆக உள்ளது. மேலும் 7,297 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,36,508 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி 57,858 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025