இந்தியாவில் மேலும் 379 பேருக்கு கொரோனா பாதிப்பு..6 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12,759 ஆகவும், உயிரிழப்பு 420 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 12,380 லிருந்து 12,759 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 லிருந்து 420 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,515 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,919, டெல்லியில் 1,578, தமிழ்நாடு 1,267, மத்திய பிரதேசத்தில் 1,120, ராஜஸ்தானில் 1,023 போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகப்படியாக தாக்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025