ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரி பணியிடங்களுக்கு 3850க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை அறிவித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது தனது காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செயல் முறை, கல்வித்தகுதி, ஆன்லைன் பதிவு, செயல்முறைகள் கட்டணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்து திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. 42,000 வரை சம்பளம் அளிப்பதாகவும் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் 3850 காலி பணியிடங்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் 650 பணியிடங்கள் காலியாக உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் ஒரு டிகிரி ஆவது முடித்திருக்க வேண்டும் என்பதே கல்வி தகுதியாக கூறப்பட்டுள்ளது. 1990க்கு மேல் பிறந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு, அதாவது விண்ணப்பதாரர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 வயதுகள் வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sbi.co.in இந்த இணையதளம் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…