ED New Director : அமலாக்கத்துறைக்கு இடைக்கால இயக்குனர் நியமனம்.! விரைவில் புதிய இயக்குனர்.!

ED New Director Rahul Navin

மத்திய அமலாகத்துறையின் இயக்குனராக செயல்பட்டு வந்த சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு தொடர்ந்து மூன்று முறை நீட்டித்து வந்தது. இதன் காரணத்தால் மத்திய அரசு மீது காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இது வழக்குகளில் சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், ஜூலை 31 வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனராக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதாவது சில முக்கிய வழக்குகளை சஞ்சய் மிஸ்ரா விசாரித்து வருவதால், அதன் காரணமாக அவரது பதவி செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பேரில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15 வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் இருக்க வேண்டும். அதற்கு மேல் பணி நீட்டிப்பு குறித்த கோரிக்கைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை இடைக்கால புதிய இயக்குனராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993 பேட்ச் இந்திய வருவாய்த்துறை பயிற்சி (IRS) பெற்றவர் இந்த அறிவிப்பானது நேற்று வெளியாகியுள்ளது. ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக மட்டுமே செயல்படுவார் எனவும், விரைவில் புதிய இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்