திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

Arvind Kejriwal: டெல்லி நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதேசமயம் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு, கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே, மார்ச் 21ம் தேதி முதல் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்றுடன் காவல் முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்படி, டெல்லி திகார் சிறையில் 2ஆம் எண் அறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனி உணவு, புத்தகம் கேட்டு கெஜ்ரிவால் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா 1ஆம் எண் அறையிலும், சஞ்சய் சிங் 5ஆம் எண் அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025