நிதின் கட்கரி நல்ல மனிதன் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் என மஹாராஷ்ட்ரா அமைச்சர் அசோக் சவான் புகழாரம்….
மும்பையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தவறான கட்சியில் சரியான மனிதர் என்று புகழ்ந்தார்.
அதாவது வீடியோ கான்பரன்சிங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அசோக் சவான் உரையாடும்போது “நான் அடிக்கடி நிதின் கட்கரி பற்றி பேசுகிறேன், நேற்றுமுன்தினம் கட்கரியைப் புகழ்ந்தேன், அவர் திறமையான அமைச்சர்.
மேலும் மகாராஷ்டிராவில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன, இதுதொடர்பாக கட்கரி தீவிரமாக செயல்படுகிறார். அவர் பணியாற்றும் முறையை கட்டுரைகள் எழுதுவதன் மூலமோ அல்லது ட்வீட் மூலமாகவோ நான் பகிரங்கமாக பாராட்டுகிறேன்.
ஆனால் அவரைப் புகழ்வது நான் அவரை அரசியல் ரீதியாக ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல, மொத்தத்தில், அவர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். எனவே நான் சொல்வது எல்லாம் அவர் சரியான மனிதர் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் ” என்பதுதான்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏழு ஆண்டுகள் பதவியில் நிறைவடைந்ததைக் கொண்டாடியபோது அசோக் சவான் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோயைக் கையாளத் தவறியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…