ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.! திடீரென ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்.!

திடீரென ராஜஸ்தான் ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் , துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அசோக் கெலாட் அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், ராஜஸ்தானில் அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதைக்குரிய சந்திப்பு என்று கூறப்பட்டாலும், அசோக் கெலாட்டுக்கு ஆதரவளிக்கும் ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் , தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் பட்டியலையும் கெஹ்லாட் ஒப்படைத்தார் என கூறப்படுகிறது.
அசோக் கெஹ்லோட்டுக்கு 102 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது அவரது ஆட்சியை காப்பாற்ற தேவையான எண்ணிக்கையை விட 1 அதிகம் உள்ளது என கூறப்படுகிறது. கெஹ்லோட் மற்றும் மிஸ்ரா இடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது என கூறப்படுகிறது.
மேலும், கொரோனா கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025