ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு டிஎஸ்பி பதவி அறிவித்த அசாம் முதல்வர்..!

Published by
Sharmi

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின்  போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார்.  இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு அம்மாநில முதல்வர்  ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் இன்று வழங்கியுள்ளார்.  அசாம் மாநில முதல்வர் ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவிற்கு அறிவித்துள்ள பரிசுகள்:

அசாமில் முதன்முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த லவ்லினாவிற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை கனவாக கொண்டுள்ளார். இதனால் அதுவரை இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், குவாஹட்டியில் உள்ள ஒரு சாலைக்கு லவ்லினாவின் பெயர் சூட்டப்படும்.  இதனை அடுத்து, லவ்லினா பதக்கம் வெல்ல காரணமாக இருந்த இவரது பயிற்சியாளர்களான பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங், ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், லவ்லினா வசிக்கும் கிராமத்தில் குத்துச்சண்டை அகாடமி வசதியோடு விளையாட்டு வளாகம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

7 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago