பாரத் பந்தால் பஞ்சாபில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!

Published by
murugan

இன்று உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக அமல்படுத்தவும், பாரத் பந்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொண்டது. மேலும், அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களும் போராட்டக்காரர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறைகள் மற்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாரத் பந்தின் போது அமைதியாக போராட வேண்டும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும், மற்றும் முக்கிய  சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.

இதனால், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உள்துறை அமைச்சகம் ஆலோசனைக்குப் பிறகு, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரா போன்ற பல மாநில அரசுகள் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு “கடுமையான நடவடிக்கை” எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பாரத் பந்த் போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பஞ்சாபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள், டிரக் யூனியன் மற்றும் மண்டி சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சீக்கியர்களின் மிக உயர்ந்த மத அமைப்பான சீக்கிய குருத்வாரா பிரபாண்டக் குழு இன்று வேலைநிறுத்தம் செய்வதாக கூறியது இதன் காரணமாக பஞ்சாப் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஹரியானாவில், துணை முதல்வர் தலைமையிலான ஜன்னாயக் ஜனதா கட்சியின் (ஜே.ஜே.பி) ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் அமைப்புகள் முற்றுகைகளைத் திட்டமிடுவதால், மாநிலத்தின் அனைத்து முக்கிய சந்தைகளும் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பல்வேறு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பொதுமக்கள் போக்குவரத்து தடைகளை சந்திக்க நேரிடும் என்று ஹரியானாவின் ஏடிஜிபி  நவ்தீப் சிங் விர்க் கூறினார். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் டெல்லி-அம்பாலா (என்.எச் -44), டெல்லி-ஹிசார் (என்.எச் -9), டெல்லி-பல்வால் (என்.எச் -19) மற்றும் டெல்லி முதல் ரேவாரி (என்.எச் -48) ஆகிய சாலைகளில் சில போக்குவரத்து இடையூறுகளைக் ஏற்படலாம் எனவும் இதன் தாக்கம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இருக்கும் என்று அதிகாரி கூறினார்.

உத்தரபிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி ஆகியோர் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில், அமைதி காக்க போராட்டக்காரர்களை முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவுறுத்தியபோதும், மாலை 3 மணி வரை மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளையும் தடுப்பதாக பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

மகாராஷ்டிராவில், சிவசேனா கூட்டணி பங்காளிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை பந்தை ஆதரித்தன. மத்திய பிரதேசத்தில், இன்று 50 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பல்வேறு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் தடுக்க முடிவு செய்துள்ளன.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago