3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 13,000 தன்னார்வலர்களை சேர்த்த பாரத் பயோடெக் ..!

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்காக தன்னார்வலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில், உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் 13,000 தன்னார்வலர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதலாக, பயோடெக் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 26,000 தன்னார்வலர்களை நியமிக்க பரிசீலித்து வருகிறது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 13,000 தன்னார்வலர்களின் ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு முடிவுகளுடன் 1-2 கட்ட சோதனைகளில் 1,000 தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் சாதகமான முடிவுகளை அளித்துள்ளது என்று கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கோவாக்சின் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025