அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றார்..!

அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுள்ளார்.சர்மாவுக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி உறுதிமொழி வழங்கினார்.
அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 தொகுதிகளில் 75 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.இதனையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சர்பானந்த சோனாவால் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்தனர்.அதனால்,இந்த இரண்டு பேரில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர்,நேற்று குவாஹாத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஹிமாந்த பிஸ்வா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து,அசாம் மாநிலத்தின் 15 வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று மதியம் 12 மணியளவில் பதவியேற்றுள்ளார்.அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி இந்த பதவிப்பிரமாணத்தை செய்து வைத்துள்ளார்.இந்த முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜகவின் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது கால்தடத்தை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025