மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை என பாஜக அறிவித்துள்ளது.
அக்டோபர் 4 ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியின்றி தோ்வாக உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் மகளிா் பிரிவின் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.
இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் எம்பி. மானஸ் புனியா ராஜிநாமா செய்தாா். இந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தனது ட்விட்டரில்” மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கு பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இந்தத் தோ்தலில் முடிவு தெரிந்ததுதான். முதல்வர் மம்தாவை மீண்டும் வெற்றி பெறவிடாமல் செய்வதுதான் எங்களது தற்போதைய பணி ஜெய் மா காளி என்றார்.
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த முதல்வா் மம்தா பானா்ஜி பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…