பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
சம்பித் பத்ரா பாஜகவின் செய்தித் தொடர்பாளராவார் .இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இதன் பின்னர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவர் குணமடைந்த நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும்.
இந்நிலையில் அவர் தற்போது முழுவதும் குணமடைந்த நிலையில் தான் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலே பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரதமரின் கொள்கைப்படி, நான் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…