அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடகா பாஜக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கருநாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈஸ்வரப்பா மீது காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். மேலும் நாளை ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் வழங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…