நித்யானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க முடிவு..!

நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதைபடுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் , இருக்கும் இடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் ப்ளூ கார்னர் நோட்டீசை நித்தியானந்தாவுக்கு கொடுக்க வேண்டும் என அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நித்தியானந்தா இருக்குமிடம் தெரியாத நிலையில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்து உள்ளனர்.
எல்லையை தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல் எட்டு வகையான நோட்டீஸ் பிறப்பிக்கும். நோட்டீஸ் கொடுக்கப்படும் நபர் எந்த நாட்டில் இருந்தாலும் ,அவரை கண்டுபிடித்து சரணடைய வைத்து உரிய நாட்டிடம் ஒப்படைக்க பொறுப்பை இன்டர்போல் ஏற்றுக்கொள்ளும்.
இந்த வகையில் நித்தியானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை துறையை அகமதாபாத் காவல்துறை நாடியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025