உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமடைந்த 50 பேரின் உடல்கள் மீட்பு!

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 38 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை, கடந்த 7 ஆம் தேதி உடைந்து. இதன்காரணமாக அலெக்நந்தா, தாலிகங்கா ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளின் கரையோரம் வாசித்த மக்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
மேலும் தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. அந்த சுரங்கத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி ரவ்வும், பகலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 38 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. இதனால் மெட்டா உடல்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சேறுகளை அகற்றும் பணியும், துளையிடும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப்பணியில் 450க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025