Wayanad Landslide - Neetu Jojo [File Image]
வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் 350க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. 6 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் சூரல்மலையை சேர்ந்த நீது ஜோஜோ எனும் பெண்ணின் உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த நீது ஜோஜோ கொடுத்த முதல் தகவலின் பெயரில் தான் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு நடந்தது பற்றி முதல் தகவல் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.
வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனமான விம்ஸ் (WIMS) நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நீது ஜோஜோ. இவர் தனது 5 வயது மகன் மற்றும் கணவருடன் சூரல்மலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட நாளில், நள்ளிரவு தனது வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும், தங்களை காப்பாற்ற கோரியும், தான் பணிபுரிந்த விம்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக நீது கூறியுள்ளார். அதன் பெயரில் தான் விம்ஸ் நிறுவனம் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு பற்றிய தகவலை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் துரதஷ்டவசமாக நீது ஜோஜோ, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 5 நாட்களுக்கு பிறகு நேற்று தான் சாலியாறு பகுதியில் மீட்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது உடலில் அணிந்து இருந்த ஆபரணங்களை கொண்டு நீதுவின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
நீதுவின் கணவரும், 5 வயது மகனும் நிலச்சரிவில் இருந்து உயிர்பிழைத்து உள்ளனர். மீட்கப்பட்ட நீதுவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், சூரல்மலை புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நீது ஜோஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வயநாடு பற்றி முதன் முதலாக தகவல் கூறிய நீது ஜோஜோ உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…