கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரளாவில் சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதால் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தான் கைதாகாமலஇருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நபர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்படியெல்லாமா எங்கள் முன் வழக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
அதில், நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம் ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம், நீங்கள் பரப்புவது ஆபாசமானது. இது சமூகத்தில் மிகவும் மோசமான செயல், குழந்தைகளை தவறாக வழி நடத்தும் செயலாக இது அமைந்து விடும், வளர்ந்து வரும் குழந்தைகள் இந்தச் செயலிலிருந்து என்ன எண்ணத்தைப் பெறுவார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன் பின் ரெஹானா பாத்திமாவின், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே கடந்த 2018 செப்டம்பரில் கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு சென்ற போது அங்கு இருந்த ஐயப்பன் பக்தர்களால் திருப்பி அனுப்பினர்.
பின்னர் போலீசார் பாதுகாப்புடன் இருவரும் பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி சென்றனர்.அப்போது சபரிமலை சன்னிதானத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரண்ட பக்தர்கள் அவர்களை நடத்து நிறுத்தினர்.பின்னர் போலீசார் பக்தர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
ஆனால் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.பிறகு இந்த விவகாரத்த்தில் தலையிட்ட கேரளா அரசு அவர்களை திருப்பி அனுப்ப போலீசாருக்கு உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்த சூழலில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டும் ரெஹானா பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேரளா காவல்துறைக்கு மனு அனுப்பினார்.ஆனால் கேரளா காவல்துறை ரெஹானா பாத்திமாவிற்கு எந்தவித பாதுகாப்பும் கொடுக்கமுடியாது என கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…