டெல்லி:ஜனவரி 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறி,அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதையடுத்து,பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு,மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.இதனைத் தொடர்ந்து,இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து,பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
உச்சநீதிமன்ற அமைத்த இந்த குழுவில் நீதிபதி (ஓய்வு) இந்து மல்ஹோத்ரா, தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல்,பஞ்சாப் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கான காரணங்கள்,அதற்கு காரணமான நபர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.களின் பாதுகாப்பு மீறல்களை தடுக்க எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…