#BREAKING: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3 விண்கலம்..!

Published by
செந்தில்குமார்

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட உலகமே  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையைப் படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

இதனையடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைகிறது என்று இஸ்ரோ தெரிவித்தது. அதன்படி, நேற்று விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. பிறகு, லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலம் இன்று இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

அதன்படி, தற்போது சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மிஷன் ஆபரேஷன் காம்ப்ளக்ஸ் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ,அடுத்த செயல்பாடு – சுற்றுப்பாதையின் குறைப்பு – ஆகஸ்ட் 6, 2023 அன்று சுமார் 23:00 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நிலவை சுற்றி வந்த பின் ஆக.23ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

4 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

4 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

5 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

5 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

6 hours ago